தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்
நெல்லை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
தேவர் ஜெயந்தி விழா
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, பணகுடி பஸ் நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர்
வள்ளியூரில் உள்ள முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு சபாநாயகர் மு.அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, வள்ளியூர் நகர செயலாளர் சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி சவுந்திரராஜன் தலைமையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை, வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகானந்தம், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, பணகுடி லாரன்ஸ், ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம் தலைமையில், மாநில தொழிற்சங்க பேரவை துணைத்தலைவர் ஆதிலிங்க பெருமாள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
களக்காடு
களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் சாலமோன் ஐசக், நிர்வாகிகள் ஆலோச்சனா ஸ்டாலின், முத்தூர் நயினார், படலையார்குளம் தாஸ், கூட்டுறவு சங்கத்தலைவர் நம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
களக்காட்டில் முத்துராமலிங்க தேவர் உருவப்படத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பி.சி.ராஜன், செல்வகருணாநிதி, நகர செயலாளர் மணிசூரியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாைத செலுத்தினர்.
நாங்குநேரி
நாங்குநேரியில் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு, நகர செயலாளர் வானமாமலை, யூனியன் துணைத்தலைவர் இசக்கி பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு விஜயநாராயணத்தில் முத்துராமலிங்க தேவர் உருவப்படத்துக்கு சங்கனாங்குளம் பஞ்சாயத்து தலைவர் ச.சின்னத்தம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
Related Tags :
Next Story