சேகோ ஆலைகளில் அதிகாரிகள் சோதனை: 14 ஆயிரம் கிலோ கலப்பட ஜவ்வரிசி பறிமுதல்


சேகோ ஆலைகளில் அதிகாரிகள் சோதனை: 14 ஆயிரம் கிலோ கலப்பட ஜவ்வரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 31 Oct 2021 2:35 AM IST (Updated: 31 Oct 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

சேகோ ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 14 ஆயிரம் கிலோ கலப்பட ஜவ்வரிசியை பறிமுதல் செய்தனர்.

தலைவாசல்:
சேகோ ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 14 ஆயிரம் கிலோ கலப்பட ஜவ்வரிசியை பறிமுதல் செய்தனர்.
திடீர் சோதனை
தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சேகோ ஆலையில் ரசாயனம் கலந்து ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி தயாரிப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரமேஷ், கண்ணன், ராஜா ஆகியோர் சேகோ ஆலையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு இருந்த ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட 9 ஆயிரம் கிலோ கிழங்குமாவு, 14 ஆயிரம் கிலோ கலப்பட ஜவ்வரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதுமட்டுமின்றி ரசாயன பொருட்களான ஹைட்ரஜன் பெராக்சைடு 300 கிலோ, பாஸ்போரிக் ஆசிட் 210 கிலோ, பார்மிக் ஆசிட் 105 கிலோ, அசிட்டிக் ஆசிட் 35 கிலோ, பிளிச்சிங் பவுடர் 400 கிலோ உள்பட மொத்தம் 1,500 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடும் நடவடிக்கை
இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், ஆத்தூர் பகுதியில் 150 சேகோ ஆலைகள் உள்ளன. இதில் இதுவரை 40 சேகோ ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 80 ஆயிரம் கிலோ ரசாயன பொருட்கள்கலந்து தயாரிக்கப்பட்ட ஸ்டார்ச் பொருட்கள், ஜவ்வரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 36 உணவு மாதிரி எடுத்து சென்னையில் கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவு வந்தவுடன் சம்பந்தப்பட்ட சேகோ ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story