சிமெண்டு ஏற்றி வந்த லாரி கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது
பாவூர்சத்திரம் அருகே சிமெண்டு ஏற்றி வந்த லாரி, கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது.
பாவூர்சத்திரம்:
நெல்லை அருகே சங்கர் நகரில் இருந்து சுமார் 30 டன் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சம்பங்குளத்தை சேர்ந்த லாலிசத் மகன் அஜி (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். நள்ளிரவில் நெல்லை - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரம் அடுத்துள்ள நாகல்குளம் மறுகாலில் தண்ணீர் செல்லும் கால்வாய் அருகே வந்தபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாய்க்குள் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 30 டன் சிமெண்டு மூட்டைகளும் தண்ணீரில் மூழ்கி வீணானது. டிரைவர் அஜி காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story