மாதவரம் கைலாசநாதர் கோவிலில் ரூ.2 கோடியில் தெப்பக்குளம்; அமைச்சர் சேகர்பாபு தகவல்


மாதவரம் கைலாசநாதர் கோவிலில் ரூ.2 கோடியில் தெப்பக்குளம்; அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2021 9:50 AM IST (Updated: 31 Oct 2021 9:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாதவரம் கைலாசநாதர் கோவில் மற்றும் கரிவரதராஜபெருமாள் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

உடன் அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், இணை கமிஷனர் ஹிரிபிரியா, உதவி கமிஷனர் ஜோதி உள்பட பலர் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கடந்த சட்டசபை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டபடி மாதவரம் கைலாசநாதர் கோவிலில் ரூ.2 கோடியில் தெப்பக்குளம் கட்டுவதற்கு வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தில் சில மாற்றங்கள் செய்ய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.

கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இருப்பதுடன், கரிவரதராஜபெருமாள் கோவிலுக்கு புதிய தெப்பக்குளம் கட்டுவதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. பசுக்களை பாதுகாக்கும் கோசாலை கட்டுவதற்கும், கோவில் கோபுரத்தை மறைக்கும் மேற்கூரைகள் அகற்றவும், கோவிலை சுற்றி சுத்தம் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story