ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆசாமிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் ஓட்டேரியை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக செம்பியம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தின் எதிரே சந்தேகப்படும்படியாக நின்ற வடமாநில வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், பாட்னாவை சேர்ந்த அனில்குமார் (வயது 21) என்பதும், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், அனில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story