நிரம்பி வழியும் உத்திரமேரூர் ஏரி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்துள்ளதால் தொடர்ந்து உத்திரமேரூர் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றாக உள்ளது உத்திரமேரூர் ஏரி. இந்த ஆண்டு உத்திரமேரூர் ஏரிக்கு நீர் வரும் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் தொடர்ந்து ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. 20 அடி ஆழமுள்ள இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளிக்கிறது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் இந்த பகுதியில் உள்ள 18 கிராமங்களிலுள்ள விவசாய நிலங்கள் முழுமையாக பயிர் செய்யப்படும். 5 ஆயிரத்து 436 ஏக்கர் பரப்பளவு நிலங்களில் இந்த ஏரியின் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்படும்.
Related Tags :
Next Story