காரணைப்புதுச்சேரியில் கொலை வழக்கில் தொடர்புடையவரை கொல்ல முயற்சி
காரணைப்புதுச்சேரியில் கொலை வழக்கில் தொடர்புடையவரை கொல்ல முயற்சி நடந்தது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
காரணைப்புதுச்சேரி
செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி ஜெயேந்திர சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் பாம் கணேஷ் என்கிற கணேஷ் (வயது 41), இவர் மீது பழவந்தாங்கல், மடிப்பாக்கம், சோழவரம் போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருக்கும்போது இவரை கொலை செய்வதற்காக சென்னையை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்கு வீச்சரிவாளுடன் வந்தது.
கொலை செய்ய முயற்சி
இதனை பார்த்து சுதாரித்துக்கொண்ட பாம் கணேஷ் உடனடியாக அவர்களிடம் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் ஓடிச்சென்று படுக்கை அறை கதவை இழுத்து உள் தாழ்ப்பாள் போட்டு கொண்டார். அறைக்குள் இருந்து அலறினார் அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வெளியே வந்த உடன் பாம் கணேஷ் வீட்டில் இருந்த 3 பேர் கும்பல் அங்கிருந்து வீச்சரிவாளுடன் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் ஒளிந்து கொண்டிருந்த பாம் கணேசனை பத்திரமாக மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர் மீது 3 கொலை வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து பாம் கணேஷ் அளித்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த திலீப், அஜித், சுடலை ராஜ் ஆகியோர் மீது கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story