நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிப்பட்டு வாரச்சந்தை திறப்பு
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிப்பட்டு வாரச்சந்தை திறக்கப்பட்டது.
வாரச்சந்தை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தை சோளிங்கர் சாலையில் பேரூராட்சி அலுவலகம் பக்கத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த வாரச்சந்தையில் பள்ளிப்பட்டு நகரை சுற்றியுள்ள வெளியகரம், கீழ்கால்பட்டடை, சானாகுப்பம், வெங்கடராஜு குப்பம், முனிரெட்டி கண்டிகை, புதுப்பட்டு, கொளத்தூர் குமாரராஜு பேட்டை, சாமந்த வாடா, கரிம்பேடு, பெருமாநெல்லூர் உள்பட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை விற்கவும், இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி செல்லவும் திரளாக வந்து செல்கின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளிப்பட்டு வாரச்சந்தை மைதானம் மூடப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வாரச்சந்தை மைதானம் நேற்று திறக்கப்பட்டது. காய்கறிகளை வாங்கவும், விற்கவும் ஏராளமானோர் திரண்டதால் நேற்று பள்ளிப்பட்டு வாரச்சந்தை களைகட்டியது.
Related Tags :
Next Story