வீட்டின் முன்பக்க அறை இடிந்தது


வீட்டின் முன்பக்க அறை இடிந்தது
x
தினத்தந்தி 31 Oct 2021 6:26 PM IST (Updated: 31 Oct 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

அரவேனு அருகே தொடர் மழையால் வீட்டின் முன்பக்க அறை இடிந்தது. அப்போது மனைவியுடன் தொழிலாளி உயிர் தப்பினார்.

கோத்தகிரி

அரவேனு அருகே தொடர் மழையால் வீட்டின் முன்பக்க அறை இடிந்தது. அப்போது மனைவியுடன் தொழிலாளி உயிர் தப்பினார்.

தொடர் மழை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட அரவேனு அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி ஈஸ்வரி. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மண் ஈரப்பதாக உள்ளது.

அறை இடிந்தது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் முருகேஷ் மற்றும் ஜோதி ஈஸ்வரி ஆகியோர் உணவு சாப்பிட்டுவிட்டு, வீட்டின் பின்பக்க அறையில் தூங்க சென்றனர்.

பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென அந்த வீட்டின் முன் பக்க அறை மற்றும் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது முருகேஷ், ஜோதி ஈஸ்வரி ஆகியோர் பின்பக்க அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நிவாரண தொகை

இதையடுத்து காலையில் அவர்கள் எழுந்ததும், வீட்டின் முன்பக்க அறை இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் உத்தரவின்படி அரசின் நிவாரண தொகையான ரூ.4,100-ஐ பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கினர்.


Next Story