தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் தேரோட்டத்தின்போது கொரோனா விதிமுறைகளை மீறிய 60 பேர் மீது வழக்கு


தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் தேரோட்டத்தின்போது கொரோனா விதிமுறைகளை மீறிய 60 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 31 Oct 2021 7:23 PM IST (Updated: 31 Oct 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் தேரோட்டத்தின்போது கொரோனா விதிமுறைகளை மீறிய 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ரதவீதிகளில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிலையில் சங்கர ராமேசுவரர் கோவில் தேரோட்டம் நிகழ்ச்சி கொரோனா ஊரடங்கை மீறி நடத்தப்பட்டதாக தூத்துக்குடியை சேர்ந்த கண்ணன், லட்சுமணன், குமார் உள்பட 60 பேர் மீது மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story