தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கீதாஜீவன் நேரி்ல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு
தூத்துக்குடியில் பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. இதனை வெளயேற்றும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இந்த பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையாளர் சாருஸ்ரீ மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தயார்
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழையை முன் எதிர்பார்த்து மாநகராட்சியின் சார்பில் செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடு காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படாதவாறு தவிர்க்கப்பட்டு உள்ளது. ராட்சத மின் மோட்டார்களை பொருத்தி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீரை வெளியேற்றி மழைநீர் வடிகால் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் 28 இடங்கள் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி கட்டப்பட்ட பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் மூலமாக வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் தொடங்கி உள்ளன. விரைவில் குடியிருப்புகளை சூழ்ந்த நீர் வெளியேற்றப்படும். மாநகராட்சி சார்பில் 180 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் மழை வந்தாலும் அதை சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் அரசு சார்பில் செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார்.
Related Tags :
Next Story