வெவ்வேறு இடங்களில் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
தொழிலாளி தற்கொலை
கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்தப்பா (வயது 50). தையல் தொழிலாளி. இவருக்கு சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஆருப்பள்ளிக்கு வந்தார்.
பின்னர் அங்குள்ள விவசாய நிலம் ஒன்றில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்ப பிரச்சினை
ஓசூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35). வேன் டிரைவர். குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த ஆனந்த், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கெலமங்கலம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42). கூலி தொழிலாளி. அதிக கடன் தொல்லையால் இவர் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் வீட்டில் திடீரென துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story