திருக்கோவிலூர் அருகே காய்கறி கடையில் பட்டாசு விற்றவர் கைது


திருக்கோவிலூர் அருகே காய்கறி கடையில் பட்டாசு விற்றவர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2021 9:59 PM IST (Updated: 31 Oct 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே காய்கறி கடையில் பட்டாசு விற்றவர் கைது

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் கடைத்தெருவில் உள்ள காய்கறி கடை ஒன்றில் அனுமதி இன்றி பட்டாசு விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையடுத்து கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட காய்கறி கடைக்கு சென்று சோதனை செய்தபோது அங்கே ஏராளமான பட்டாசு பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடை உரிமையாளர் சுந்தர்(வயது 45) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட பட்டாசு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 


Next Story