கான்கிரீட் தூண் சரிந்து விழுந்ததில் கொத்தனார் பலி


கான்கிரீட் தூண் சரிந்து விழுந்ததில் கொத்தனார் பலி
x
தினத்தந்தி 31 Oct 2021 10:02 PM IST (Updated: 31 Oct 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

கான்கிரீட் தூண் சரிந்து விழுந்ததில் கொத்தனார் பலி

தாராபுரம், 
தாராபுரத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த போது கான்கிரீட் தூண் சரிந்து விழுந்ததில் கொத்தனார் பலியானார். மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கான்கிரீட் தூண் சரிந்து விழுந்தது
 தாராபுரம் மேற்கு பஜனை மடத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது54). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜ் (58) மற்றும் 2 பெண்கள் உள்பட 4 பேர் தாராபுரம் புதிய பஸ் நிலையம் அருகே சரவணன்என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். 
அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் இருந்த கான்கிரீட் தூண் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இதில் ஆறுமுகம், ரங்கராஜ் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 
உடனே  அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டனர். ஆனால் அதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த ரங்கராைஜ தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். விபத்தில் இறந்த ஆறுமுகத்திற்கு ராதிகா என்ற மனைவியும், தாரணி (21), சரிகா (18) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

Next Story