கல்வராயன்மலை அடிவாரத்தில் மரவள்ளி தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு
கல்வராயன்மலை அடிவாரத்தில் மரவள்ளி தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே ஊத்துஓடை வனப்பகுதியை ஒட்டி பிச்சை மகன் மாரிமிக்கேல் என்பவருக்கு சொந்தமான மரவள்ளி தோட்டம் உள்ளது. இவர் நேற்று அந்த தோட்டத்தை பார்வையிட சென்றபோது அங்கே சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது குறித்து உடனடியாக வனத்துறைக்கு மாரிமிக்கேல் தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனக்காப்பாளர் மணிகண்டன் உடனடியாக அங்கு வந்து மலைப் பாம்பை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் பாம்பை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை உயிரோடு பிடித்து கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள தகறை காப்புக்காடு பகுதியில் கொண்டு விட்டனர்.
Related Tags :
Next Story