மழையும் பெய்ததால் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.


மழையும் பெய்ததால் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
x
தினத்தந்தி 31 Oct 2021 10:26 PM IST (Updated: 31 Oct 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

மழையும் பெய்ததால் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

உடுமலை, 
உடுமலை கடைவீதியில் தீபாவளிக்கு பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் மழையும் பெய்ததால் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
தீபாவளி கூட்டம்
உடுமலையில் வ.உ.சி.வீதி, சீனிவாசா வீதி, கல்பனா சாலை, பழனிசாலை, மத்திய பஸ்நிலையம் பகுதி, பழைய பஸ்நிலையம்பகுதி உள்ளிட்ட இடங்களில் தீபாவளியையொட்டி பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.
 அதுவும் வ.உ.சி.வீதி, சீனிவாசா வீதி கல்பனா சாலை உள்ளிட்ட சாலைகளில் ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் ஆகியவை அதிகம் உள்ளன. அதனால் அந்த சாலைகளில் பொதுமக்கள்கூட்டம் மிக அதிகமாக இருக்கும். 
வாகன போக்குவரத்துக்கு தடை
அதன்படி வ.உ.சி.வீதி மற்றும் சீனிவாசா வீதிக்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் நுழைய முடியாத வகையில் அந்த வீதிக்குள் நுழையும் பகுதியான பழனிசாலை, சத்திரம் வீதி, கச்சேரி வீதி உள்ளிட்ட சாலை சந்திப்புபகுதிகளில் போலீசார் தடுப்புகளை வைத்துள்ளனர்.
அதேபோன்று கல்பனா சாலையில் சீனிவாசா வீதி, வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும்பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து சத்திரம் வீதிக்குள் நுழையும் பகுதி ஆகிய இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவுப்பகுதிகளில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் நின்று கொண்டு வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். அத்துடன் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதிகளுக்குள் உள்ள சாலைகளில் காலை 9 மணிமுதல் இரவு 10மணிவரை வாகன போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
நேற்று  பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் கடைகளில் பொருட்கள்விற்பனை குறைவாக இருந்தது.சாலையோரக்கடைகளிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால், குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கல்பனாசாலை-சீனிவாசா வீதி சந்திப்பு பகுதி, வ.உ.சி.வீதி-சீனிவாசா வீதி சந்திப்பு பகுதி ஆகிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதிலிருந்தபடி, ஒலிபெருக்கி மூலம் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி அறிவித்தபடி இருந்தனர்.
மழையால் பாதிப்பு
மாலை நேரத்தில் பொருட்கள் வாங்குவதற்குமக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தனர்.ஆனால் பிற்பகல் முதல் லேசான மழை பெய்யத்தொடங்கியது. அதனால் இந்த தீபாவளி பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டமும் மிகக்குறைந்து காணப்பட்டது.  தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வந்த சாலையோர வியாபாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை தார்பாய் போட்டு மூடி பாதுகாத்து ஓரமாக நிறுத்தி யிருந்தனர். மழையால் பொருட்கள் விற்பனை வெகுவாக குறைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

Next Story