வேலூரில் இந்து திராவிட மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வேலூரில் இந்து திராவிட மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Oct 2021 10:27 PM IST (Updated: 31 Oct 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

இந்து திராவிட மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேலூர்

இந்து திராவிட மக்கள் கட்சி இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்  நடந்தது. 

வேலூர் மாவட்ட தலைவர் கணேஷ்சாஸ்திரிகள் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தேவராஜ்சாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் கர்ணன், சென்னை, காஞ்சீபுர மாவட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், சிறப்பு அழைப்பாளராக கட்சி தேசிய தலைவர் ரமேஷ்பாபு, மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், வங்காளதேசத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி 10-க்கும் மேற்பட்ட இந்துக்களை படுகொலை செய்தும், 100-க்கும் மேற்பட்ட இந்து கோவில்களை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகளை கண்டித்தும், தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை அப்புறப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில், இந்து திராவிட மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story