சூப்பர் மார்க்கெட்டில் தீவிபத்து; ரூ.12 லட்சம் பொருட்கள் சேதம்
கூத்தாநல்லூரில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூரில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூப்பர் மார்க்கெட்டில் தீப்பிடித்தது
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், ஆஸ்பத்திரி சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து அதன் உரிமையாளர் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று அதிகாலையில் மின் கசிவு ஏற்பட்டு சூப்பர் மார்க்கெட்டு தீப்பிடித்து எரிந்தது. தீ மள,மளவென பரவி சூப்பர் மார்க்கெட் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் சாலையில் கடுமையான புகைமூட்டம் காணப்பட்டது.
ரூ.12 லட்சம் பொருட்கள் சேதம்
இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்களும், மன்னார்குடி தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த குளர்சாதன பெட்டி, கட்டில் மெத்தை, பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. அதன் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story