நெல் வயல்தின விழா கொண்டாடப்பட்டது.


நெல் வயல்தின விழா கொண்டாடப்பட்டது.
x
தினத்தந்தி 31 Oct 2021 10:30 PM IST (Updated: 31 Oct 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

நெல் வயல்தின விழா கொண்டாடப்பட்டது.கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் கிராமத்தில் தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நெல் வயல்தின விழா கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோபால கிருஷ்ணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சேக் அப்துல்லா கலந்து கொண்டு உயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள், விதைநேர்த்தி செய்யும் முறைகள் மற்றும் உயிர் உரங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். நெற்பயிரினை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் குறித்தும் நீர் மேலாண்மை, உர மேலாண்மை முறைகள் குறித்தும் மற்றும் பயிர் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி பேசினார். ராமநாதபுரம் வட்டார வேளாண்மை அலுவலர் சாலினா களை மேலாண்மை முறைகள், நெற்பயிரினை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்துவது மற்றும் கடைபிடிக்க வேண்டிய பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றியும் விரிவாக விளக்கி கூறினார். பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப துண்டுபிரசுரகங்கள் வழங்கப்பட்டது. புத்தேந்தல் கிராம பஞ்சாயத்து தலைவர் கோபிநாத் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜேஸ்குமார் ஆகியோர் செய்திருந்தார்.

Next Story