வெண்ணந்தூர் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வெண்ணந்தூர் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்த தொட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி வையப்பமலையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுடைய மகள் கிருத்திகா (வயது 16). இவர் சக்கராம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கிருத்திகா சற்று மனநிலை பாதிக்கப்பட்டு வந்ததாகவும், இதற்காக சேலத்தில் உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே குமார் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று கிருத்திகா தங்களது ஓட்டு வீட்டின் மேற்கூரையில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவியின் தாய் தனலட்சுமி வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story