106 வாகனங்கள் பறிமுதல்
விதிமுறைகளை மீறி தேவர் குருபூஜைக்கு சென்ற 105 இருசக்கர வாகனங்கள் உள்பட 106 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
விதிமுறைகளை மீறி தேவர் குருபூஜைக்கு சென்ற 105 இருசக்கர வாகனங்கள் உள்பட 106 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
144 தடை
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் குருபூஜை விழாவையொட்டி மாவட்ட நிர்வாகத்தினால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தடை உத்தரவை மீறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
மேலும் சிவகங்கை பஸ் நிறுத்தம் அருகே அரசு கண்ணாடியை உடைத்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பறிமுதல்
இதேபோல கடந்த 30-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவிற்கு விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற 105 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story