வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
பாசனத்துக்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை,
பாசனத்துக்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனு
சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதிமூலம், தலைவர் உலகநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணநாதன், பொருளாளர் மலைச்சாமி, செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
வைகை ஆற்றின் மூலம் பூர்வீக பாசனத்தில் முதல் பாசனப்பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் 4 கண்மாய்களும், 3642.38 ஏக்கர் நிலமும் பயன்பெறுகிறது. இதுபோல இரண்டாம் பாசனப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் 87 கண்மாய்களும் 40,743.09 ஏக்கரும் பயன் அடைகிறது.
மேலும் மூன்றாம் பாசன பகுதியில் 41 கண்மாய்களும் 14,497 ஏக்கரும் பயனடைகிறது. தற்போது வைகை அணை தண்ணீரை எங்களுக்கு திறந்து விட்டால் சம்பா 2 நெல் சாகுபடியை தண்ணீர் பற்றாக்குறை இன்றி முழு விளைச்சல் பெற முடியும்.
நடவடிக்கை
எனவே சிவகங்கை மாவட்டத்தில் வைகை பூர்வீக பாசன பகுதி ஆகிய 132 கண்மாய்களும், அதன்மூலம் 68,883.47 ஏக்கர் நிலங்களும் பயனடையும் வகையில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story