மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம்
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மயிலாடுதுறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறை:
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மயிலாடுதுறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.
வாக்குப்பதிவு எந்திரம்
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் நடைபெற இருக்கும் 2021 நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுதல் குறித்த பயிற்சி வகுப்பு மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார்.
பயிற்சி பெற்றனர்
பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர்களான மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சி ஆணையர்கள், தரங்கம்பாடி, குத்தாலம், வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் மணல்மேடு ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளுதல் குறித்து பயிற்சி பெற்றனர்.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங்கடாஜலபதி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story