திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை


திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Nov 2021 1:25 AM IST (Updated: 1 Nov 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

மது குடிப்பதை தாய் கண்டித்ததால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி, நவ.1-
புதுவை வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். மீனவர். இவரது மனைவி நீதிமொழி. இவர்களது 2-வது மகன் விக்னேஷ் (வயது 27). இவர் தனது தந்தையுடன் மீன்பிடி தொழில் செய்து வந்தார். விக்னேசுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அவரது குடும்பத்தினர் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை நிச்சயம் செய்தனர். இருவீட்டாரும் தடபுடலாக திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். 
இந்த நிலையில் விக்னேஷ் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story