சோதனை என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல
சோதனை என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் 2 பணிமனை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 5 பணிமனை புதிய நிர்வாகிகள் நியமன சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராேஜந்திரபாலாஜி, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமனம் சான்றிதழ்களை வழங்கினர். அப்போது முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-
அ.தி.மு.க.விற்கு எப்போது எல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போது எல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கின்றனர். திடீரென வந்தவர்கள் திடீரென போய் விட்டார்கள். அ.தி.மு.க. என்றும் சாகா வரம்பெற்ற இயக்கம். கழகத்திற்கு 1996-ம் ஆண்டு ஏற்படாத சோதனையா தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில்கூட திருத்தங்கல் நகராட்சியில் நான் துைண தலைவராக வெற்றி பெற்றேன். சோதனை என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல. சோதனைகள் வரும்போது தான் எறிகின்ற பந்து எப்படி துள்ளி எழுந்து வருமோ அதே போன்று அ.தி.மு.க. மீண்டும் எழும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், அண்ணா தொழிற்சங்க மாநில பொருளாளர் அப்துல்ஹமீது, விருதுநகர் மண்டல அண்ணா தொழிற்சங்கம் (போக்குவரத்து பிரிவு) செயலாளர் குருசாமி, பொருளாளர் பழனி, விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் விஜயகுமரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story