தென்காசியில் தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
தென்காசியில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
தென்காசி:
தென்காசியில் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
கூட்டம் அலைமோதியது
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நேற்று மாலை தென்காசி கீழ ரத வீதி, சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், மேல ஆவணி மூல வீதி, பழைய பஸ் நிலையம் பகுதி ஆகிய இடங்களில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் தீபாவளி பொருட்களை வாங்குவதற்கு வந்தனர். குறிப்பாக ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சாலையோரக் கடைகளிலும் பொதுமக்கள் ஜவுளிகளை வாங்கிச் சென்றனர். பல இடங்களில் சாலையோர கடைகளில் ரூ.100, ரூ.200, ரூ.300 என வியாபாரிகள் சத்தமிட்டு வியாபாரம் செய்தனர். மேல ஆவணி மூல வீதி மிகவும் நெருக்கடியாக காணப்பட்டது.
போலீசார் ஆய்வு
போலீசார் ஆங்காங்கே நின்று கூட்டத்தினரை ஒழுங்கு படுத்தினர்.தென்காசி நகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் ஏற்கெனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றங்கள் எதுவும் நடந்தாலும் உடனடியாக இந்த கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அடிக்கடி ஆய்வு செய்யப்படுகின்றன என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story