புதிய ரேஷன் கடை


புதிய ரேஷன் கடை
x
தினத்தந்தி 1 Nov 2021 2:15 AM IST (Updated: 1 Nov 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ராஜீவ்நகர் பொதுமக்களின் வசதிக்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய ரேஷன் கடையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கடையில் உள்ள அரிசி மற்றும் பருப்பின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏராளமான பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அப்போது தாசில்தார் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், கழக பிரமுகர் சீனிவாசப்பெருமாள், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகஜோதிராஜேந்திரன், வருவாய்த்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story