ஆட்டோ மீது கார் மோதல்; என்ஜினீயர் பரிதாப சாவு


ஆட்டோ மீது கார் மோதல்; என்ஜினீயர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 1 Nov 2021 2:19 AM IST (Updated: 1 Nov 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் ஆட்டோ மீது கார் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

புளியங்குடி:
புளியங்குடியில் ஆட்டோ மீது கார் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-

என்ஜினீயர்

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி அகஸ்தியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன். இவருடைய மகன் கோபி என்ற வெங்கடேஷ் (வயது 31). இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக சென்னையில் பணிபுரிந்து வந்தார். தற்போது வீட்டில் இருந்து பணி செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை கோபி தனது நண்பர்களுடன் சங்கரன்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

கார் மோதியது

புளியங்குடி-சங்கரன்கோவில் ரோட்டில் சென்றபோது கடையநல்லூரை சேர்ந்த முகமது மைதீன் என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென ஆட்டோவின் பின்புறம் பலமாக மோதியது. இதில் ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் இருந்த கோபிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஆட்டோவில் பயணம் செய்த முப்புடாதி மற்றும் ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

பலி

உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோபியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

Next Story