குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2021 2:27 AM IST (Updated: 1 Nov 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது ெசய்யப்பட்டனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர்
சாமியார்மடம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). இவர் மீது தக்கலை, திருவட்டார், இரணியல் போன்ற போலீஸ் நிலையங்களில் கொலை மிரட்டல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். 
இதனால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்க கோரி கலெக்டர் அரவிந்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பிரசாந்தை தக்கலை போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 
மற்றொருவர் கைது
இதே போல் காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் சஜின்குமார் (24). இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் அரவிந்தின் அனுமதியுடன் சஜின்குமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story