ஆயர்கள் மாமன்ற தொடக்க விழா
நாகர்கோவிலில் ஆயர்கள் மாமன்ற தொடக்க விழா கோட்டார் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது.
நாகர்கோவில்,:
நாகர்கோவிலில் ஆயர்கள் மாமன்ற தொடக்க விழா கோட்டார் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது.
ஆயர்கள் மாமன்ற நிகழ்ச்சி
உலக ஆயர்கள் மாமன்ற நிகழ்ச்சிகள் 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த 10-ந் தேதி போப் ஆண்டவர் பிரான்சிஸ் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் ஆயர்கள் மாமன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இதே போல குமரி மாவட்டம் கோட்டார் மறை மாவட்டத்தில் மாமன்ற தொடக்க விழா நாகர்கோவில், கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலயத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். முன்னதாக மாமன்ற கொடியேற்றப்பட்டது.
கொடி வழங்கப்பட்டது
பின்னர் கோட்டாா் மறைமாவட்டத்திற்கு கீழ் உள்ள மறை வட்டத்திற்கு உலக ஆயர்கள் மாமன்ற நிகழ்ச்சி தொடர்பான கொடி வழங்கப்பட்டது. விழாவில் வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சாமி சைதன்யானந்த மகராஜ், கலாசார பள்ளியின் தலைமை இமாம் சவுகத்அலி உஸ்மான் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனையடுத்து ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடந்தது. திருப்பலியில் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிளாரிஸ், மறைமாவட்ட செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் வில்சன், கோட்டார் வட்டார முதன்மை அருள்பணியாளர் சகாயஆனந்த், கோட்டார் பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன், துணை பங்குதந்தை பிராங்கோ, சவரிமுத்து, சகாயதிலகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story