வீடு புகுந்து 5¼ பவுன் நகைகள் திருட்டு
வீடு புகுந்து 5¼ பவுன் நகைகளை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்ககிரி:
சங்ககிரி ரெயில்வே ஸ்டேஷன் நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். தனது கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை யாரோ மர்மநபர் பறிப்பது போன்று ஜெயலட்சுமி உணர்ந்தார். திடுக்கிட்டு விழித்தார். அப்போது தான் அணிந்து இருந்த தங்க சங்கிலியை யாரோ மர்மநபர் பறித்து சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட நகைகளையும் காணவில்லை. மொத்தம் 5¼ பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story