சேலத்தில் பரிதாபம்: வெந்நீரில் தவறி விழுந்த சிறுவன் சாவு


சேலத்தில் பரிதாபம்: வெந்நீரில் தவறி விழுந்த சிறுவன் சாவு
x
தினத்தந்தி 1 Nov 2021 3:59 AM IST (Updated: 1 Nov 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வெந்நீரில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சேலம்:
சேலம் தாதம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் தனுஷ் (வயது 4). சிறுவனை குளிப்பாட்டுவதற்காக அவனது தாய் வெந்நீர் வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த தனுஷ், எதிர்பாராமல் வெந்நீர் வைத்திருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துவிட்டான். இதில், சிறுவனின் உடலில் வெந்நீர் பட்டு காயம் ஏற்பட்டது. சிறுவனை கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story