சூனாம்பேடு அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் சாவு


சூனாம்பேடு அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் சாவு
x
தினத்தந்தி 1 Nov 2021 5:52 AM IST (Updated: 1 Nov 2021 5:52 AM IST)
t-max-icont-min-icon

சூனாம்பேடு அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அடுத்த தோட்டசேரியை சேர்ந்தவர் சேகர். டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி ஆனந்தி (வயது35). அதே ஊரை சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனார். இவரது மனைவி மாலா (30). நேற்று ஆனந்தி, மாலா இருவரும் சூனாம்பேடு அடுத்த கரும்பாக்கத்தில் நாற்று நடுவதற்காக சென்றனர்.

அப்போது சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி ஆனந்தி, மாலா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story