கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி 30 பவுன் நகை திருட்டு
கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி மர்மநபர்கள், கமலேஷ் ஜெயினின் கவனத்தை திசை திருப்பி 30 பவுன் மதிப்பிலான 5 தங்க சங்கிலிகளை நைசாக திருடிச்சென்று விட்டனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கமலேஷ் ஜெயின் (வயது 37). இவர் அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த மர்மநபர்கள், தாங்கள் சொந்த ஊருக்கு செல்வதாகவும், தங்களிடம் பெரிய அளவில் தொகை உள்ளதாகவும், அதற்கு தங்க சங்கிலிகள் வேண்டும் எனவும் கூறினர்.
தன்னிடம் தங்க சங்கிலிகள் இ்ல்லாததால் கமலேஷ் ஜெயின், பல்லாவரத்தில் உள்ள தனது உறவினரின் நகை கடையில் இருந்து தங்க சங்கிலிகளை கொண்டு வந்து காட்டினார். அந்த நகைகளை பார்த்து கொண்டிருந்த மர்மநபர்கள், கமலேஷ் ஜெயினின் கவனத்தை திசை திருப்பி 30 பவுன் மதிப்பிலான 5 தங்க சங்கிலிகளை நைசாக திருடிச்சென்று விட்டனர். அவர்கள் சென்றபிறகு நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கமலேஷ் ஜெயின், இதுபற்றி சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story