தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள்


தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள்
x
தினத்தந்தி 1 Nov 2021 7:55 PM IST (Updated: 1 Nov 2021 7:55 PM IST)
t-max-icont-min-icon

தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள்

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரங்கோடு அரசு தேயிலை தோட்ட(ரேஞ்சு-1) எழுபதுசெட் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு குட்டியுடன் 2 காட்டுயானைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவர்கள் பீதி அடைந்து உள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் அந்த காட்டுயானைகள் உலா வந்தன. 

இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவை அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து முகாமிட்டு உள்ளன. இதனால் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story