தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 1 Nov 2021 8:00 PM IST (Updated: 1 Nov 2021 8:00 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதா நகரை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 42). சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்மநபர் திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மோட்டார் சைக்கிளை திருடியதாக தாளமுத்துநகர் ராம்தாஸ் நகரை சேர்ந்த சம்சுதீன் மகன் பீர் முகமது (21) என்பவரை கைது செய்தனர். 

Next Story