தமிழக, கேரள மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக, கேரள மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி:
தேனி பழைய பஸ் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முல்லைப்பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் கேரள நடிகர்கள் மற்றும் கேரள அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதனை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பெரியகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயப்பிரகாஷ், போடி தொகுதி செயலாளர் பிரேம்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பம் தொகுதி செயலாளர் குணசேகரன், பேரிடர் மீட்பு பாசறை மாவட்ட செயலாளர் விக்னேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்த வேண்டும். பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். அணை குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசு மற்றும் தமிழக, கேரள மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story