வெளிநாட்டு ஆந்தை பிடிபட்டது


வெளிநாட்டு ஆந்தை பிடிபட்டது
x
தினத்தந்தி 1 Nov 2021 8:38 PM IST (Updated: 1 Nov 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

போடியில் வீட்டுக்குள் புகுந்த வெளிநாட்டு ஆந்தை பிடிபட்டது.

போடி:
போடி அமராவதி நகர் பகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் ஒருவரது வீட்டுக்குள் வெளிநாட்டு ஆந்தை ஒன்று புகுந்தது. உடனே அவர் இதுகுறித்து போடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் சுமார்  ஒரு மணி நேரம் போராடி அந்த ஆந்தையை பிடித்தனர். இந்த ஆந்தை ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தது ஆகும். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த ஆந்தையை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


Next Story