ஆண்டிப்பட்டி சந்தையில் களை கட்டிய வெள்ளாடுகள் விற்பனை
ஆண்டிப்பட்டி சந்தையில் வெள்ளாடுகள் விற்பனை களை கட்டியது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரம் மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். இந்த சந்தையில் குரும்பாடு, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டிப்பட்டி சந்தையில் வெள்ளாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இந்த பகுதியில் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளின் இறைச்சி அதிக ருசி கொண்டதாக இருக்கும். இதனால் இறைச்சி கடைக்காரர்கள் தரமான வெள்ளாடுகளை வாங்க அதிக ஆர்வம் காட்டினர். இதைத்தொடர்ந்து ஆண்டிப்பட்டி சந்தையில் வெள்ளாடுகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. அதாவது 15 கிலோ எடை கொண்ட வெள்ளாடுகள் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டை விட வெள்ளாடுகள் விலை அதிகரித்து காணப்பட்டாலும், சில்லறை இறைச்சி விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்போவதில்லை என்று இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story