விபத்தில் சிக்கியோருக்கு முதலுதவி சிகிச்சை
விபத்தில் சிக்குபவர்களுக்கு போலீசார் எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் நடந்தது.
திண்டுக்கல்:
விபத்தில் சிக்குபவர்களுக்கு போலீசார் எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில், விபத்தில் சிக்குபவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை கொடுத்து, அவர்களின் உயிரை காப்பாற்றலாம் என்பது குறித்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த முகாமில் ஏராளமான போலீசார் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்
Related Tags :
Next Story