காவேரிப்பட்டணம் அருகே மூதாட்டி அடித்துக் கொலை


காவேரிப்பட்டணம் அருகே மூதாட்டி அடித்துக் கொலை
x
தினத்தந்தி 1 Nov 2021 11:15 PM IST (Updated: 1 Nov 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காவேரிப்பட்டணம்:
மூதாட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த சுருளிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் மங்கம்மா (வயது 75). இவருடைய கணவர் கிருஷ்ணய்யர். முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மங்கம்மாவிற்கு திருமகன் (45) என்ற மகன் இருந்தார். 
முன்னாள் ராணுவ வீரரான அவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மங்கம்மாவின் மருமகள் ரேவதி தனது 2 மகள்களுடன் அவரது சொந்த ஊரான கோவைக்கு சென்று விட்டார்.
கொலை
இதனால் வீட்டில் மங்கம்மா மட்டும் தனியாக இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அதே நேரத்தில் டி.வி. மட்டும் தொடர்ந்து ஓடி கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று காலை வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த போது தலையில் காயங்களுடன் மங்கம்மா பிணமாக கிடந்தார். இது குறித்து அவர்கள் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
நகைக்காக கொலையா?
அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த மங்கம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் மர்ம நபர்கள் வந்து மங்கம்மாவை கொலை செய்து நகை, பணத்தை எடுத்து சென்றார்களா? அல்லது வேறு காரணங்களுக்காக கொலை நடந்ததா? என காவேரிப்பட்டணம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த கொலை சம்பவம் காவேரிப்பட்டணம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story