அரசு பள்ளியில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் சாலை மறியல்
அரசு பள்ளியில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
ஏரியூர்:
ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் இடையே திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த தகராறில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யக்கோரி ஏரியூர்-பென்னாகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story