கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 1 Nov 2021 11:43 PM IST (Updated: 1 Nov 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே வழுதூர் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்று விட்டனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல பூஜை செய்வதற்கு பூசாரி சென்றபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அனைவரும் அங்கு சென்று பார்த்தனர். கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தை எடுத்து சென்றது தெரிந்தது. 
இதுகுறித்து வழுதூர் தனுஷ்கோடி மகன் ராஜா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story