நச்சலூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலி


நச்சலூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 2 Nov 2021 12:37 AM IST (Updated: 2 Nov 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

நச்சலூர் அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

நச்சலூர்,
மின்னல் தாக்கியது
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி வடக்கு மாடுவிழுந்தான் பாறையை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவரது மனைவி வள்ளி (வயது50), கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்களும், தேவி என்ற ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்று காலை நெற்பயிர்களுக்கு களை எடுக்கும் வேலைக்கு சென்ற வள்ளி, பின்னர் மாலை 4 மணியளவில் ஆடுகளுக்கு புல் அறுக்க வயல்வெளிக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென வள்ளி மீது மின்னல் தாக்கியது. 
பெண் பலி
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நங்கவரம் வருவாய் அலுவலர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ராஜலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story