மலைப்பாம்பு பிடிபட்டது


மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 2 Nov 2021 12:45 AM IST (Updated: 2 Nov 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் அஞ்சலை என்பவரது வீட்டில் கோழியை விழுங்கிய நிலையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்து கிடந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் கண்ணன் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை பிடித்து வன ஊழியர் முதலியப்பனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு செவிலிமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.


Next Story