தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை
தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த 2 நாட்களில் சராசரியாக 18 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணையில் 92 சதவீதமும், மணிமுத்தாறு அணையில் 40 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை செல்லலாம். ஆனால் தற்போது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கன அடி தண்ணீர்தான் செல்கிறது. எனவே மக்கள் அச்சப்படத்தேவையில்லை. இருந்த போதும் ஆற்றில் குளி்க்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று திருக்குறுங்குடி நம்பிகோவில், களக்காடு தலையணை, காரையாறு அணைப்பகுதி, மாஞ்சோலை ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் 140 முகாம்கள். கடலோர பகுதியில் 7 சுனாமி பேரிடர் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக 88 இடங்கள் கண்டறியப்பட்டிருந்தது. தொடர்ந்து அரசு எடுத்த முயற்சியின் காரணமாக பல்வேறு இடங்கள் சரிசெய்யப்பட்டு தற்போது 65 இடங்கள் மட்டுமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story