புதிதாக 11 பேருக்கு கொரோனா
புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதிகம் என்பது தான் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் சிகிச்சையில் குணமடைவோா் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 13 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 640 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு தற்போது 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 416 ஆக உள்ளது.
Related Tags :
Next Story