தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலையில் ஓடும் கழிவுநீர்
தஞ்சை சுந்தரம் நகர் பத்தாவது தெருவில் சாக்கடை நீர் குளம்போல தேங்கி காணப்படுகிறது. இந்த பகுதியில் பாதாள சாக்கடை குழியிலிருந்து கழிவுநீர் மேலே பெருக்கெடுத்து சாலைகளில் ஓடி குளம்போல தேங்கி விடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் என்ற அச்சம் மக்களிடம் நிலவி வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாதாள சாக்கடை நீர் வெளியேறாமல் கழிவுநீர் மூடியை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். -பொதுமக்கள், சுந்தரம் நகர்.
வடிகால் வசதி வேண்டும்
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் அருகே பெரிய கடைவீதி மற்றும் முக்கிய வீதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் உள்ள மேடு, பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். மேலும் பலர் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.மேலும் மழை தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைத்தண்ணீர் வடிவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-விக்னேஸ்வரன், பாபநாசம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுக்கூர் நியாய விலை கடை முன்பு மழை தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் பொருட்கள் முன்னதாகவே வழங்கப்படும் என்ற அறிவிப்பையொட்டி பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதில் சிரமம் அடைகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபயாம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், மதுக்கூர்.
தார்ச்சாலை வேண்டும்
பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்க்குன்னம் ஊராட்சி தீபாம்பாள்புரம் என்னும் கிராமத்தில் கொத்த தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் தார்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை. மேடு பள்ளங்களில் மழைநீர் தேங்கி விடுகிறது. வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தர வேண்டும். -கார்த்திக்கேயன், தீபாம்பாள்புரம்.
சேறும், சகதியுமான சாலை
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் வளப்பக்குடி கீழத்தெருவில் கூத்தாயி மேட்டில் சிமென்டு சாலை மிகவும் சேதமடைந்ததுவிட்டது. மேலும மழைகாலம் என்பதால் சாலையில் சேறும், சகதியும் நிறைந்து வயல் வெளிபோல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன விபத்தும் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-பொதுமக்கள், திருவையாறு.
Related Tags :
Next Story