பா.ம.க.வினர் சாலைமறியல்
பா.ம.க.வினர் சாலைமறியல்
சேலம், நவ.2-
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பா.ம.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூரில் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலைமறியல்
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் பா.ம.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்்த வகையில், மேச்சேரி பஸ் நிலையம் பகுதியில், கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராஜா, ராமகிருஷ்ணன், மேச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிசாமி, கவுன்சிலர் மாதப்பன், தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வம், மாவட்டபொறுப்பாளர்கள் கோவிந்தன், ரகுபதி, சுதாகர், தாமரைக்கண்ணன், மேச்சேரி நகர செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 105 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
கைதான பா.ம.க.வினரை, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் ரேவதி ராஜசேகர் ஆகியோர் சந்தித்து பேசினர்.
எடப்பாடி
இதேகோரிக்கையை வலியுறுத்தி, கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமையில் எடப்பாடி பஸ் நிலையம் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. மாநில இளைஞரணி துணை செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசுப்பிரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாவட்ட தலைவர் அப்பு, ஒன்றிய கவுன்சிலர்கள் நடேசன், குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் அலமேலு ஈட்டிகிருஷ்ணன், சுந்தரம், நகர தலைவர் துரை, சுகுமார், வன்னியர் சங்கம் மாரியப்பன், மாவட்ட கவுன்சிலர் பச்சமுத்து மாவட்ட இளைஞரணி மகேந்திரன், சங்ககிரி ஒன்றிய செயலாளர் பூபதி, சத்யா, இளைஞரணி மணிமாறன், ஒன்றிய செயலாளர் கார்த்தி, தம்பிதுரை, மவுலீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர்
இதேபோல் ஓமலூர் காடையாம்பட்டி ஒன்றிய பா.ம.க. வன்னியர் சங்கம் சார்பில் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் முருகன், மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை சட்ட பாதுகாப்பு குழு செயலாளர் கலாசெல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர செயலாளர் சுஜன், மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் பரணிலதா, ஒன்றியக்குழு துணை தலைவர் செல்வி ராமசாமி, பா.ம.க. தொகுதி செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், குமார், சண்முகசுந்தரம், விஜயகுமார், மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 66 பேரை கைது செய்து தர்மபுரி ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
இதேபோல் சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பி. நடராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பி.என்.குணசேகரன், எம். நாராயணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பச்சமுத்து, ராமராஜ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பா.ம.க.வினர் பெரியார் சிலை அருகே ஆத்தூர்-சேலம் சாலையில் திடீெரன மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 2 பேர் அந்த வழியாக தம்மம்பட்டியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த அரசு டவுன்பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் அழைத்து சென்று ஒரு திருமண மண்டபத்தில் போலீசார் காவலில் வைத்தனர். மேலும் பஸ் கண்ணாடியை உடைத்ததாக 2 பேரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story