சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்


சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 2 Nov 2021 2:44 AM IST (Updated: 2 Nov 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர், சிவகாசியில் சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

விருதுநகர்,
விருதுநகர் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முன்னாள் மாநில துணைத்தலைவர் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில அரசு ஊழியர் சங்க செயலாளர் கண்ணன், ஓய்வுபெற்ற ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குருசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சிவகாசி கிளை செயலாளர் விக்னேஷ் குமார் வரவேற்றார். முடிவில் சுகாதார ஆய்வாளர் சங்க நிர்வாகி மகேஸ்வரன் நன்றி கூறினார். அதேபோல சிவகாசியில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது. 

Next Story